உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவி ஏற்றுள்ளார்

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
77 பார்வைகள்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக் கேட்டுக்கொண்டார்.

அண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், “மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார்.

மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அண்டி பர்ன்ஹாம், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபுவாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘ மன்னரின் கையை முத்தமிடும்’ (Kissed hands) மரபுச் சடங்கை நிறைவு செய்தார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரண்மனை அறிக்கையில் பர்ன்ஹாம் மன்னரின் “கைகளை முத்தமிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையில் கைகுலுக்கிக் கொண்டதாகவே கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0