உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 11 மணி நேரம் முன்
35 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து 10 ஆவது நாளாக இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

சமீபத்தில் ஜோர்தான் மற்றும் ஈராக்கில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தமைக்கு பதிலடியாக, ஈரான் “கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

முன்னதாக ஈரானின் இராணுவ மற்றும் தகவல் தொடர்பு மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதேவேளை, பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தனது நாடு அமெரிக்காவுடன் ஒரு “பெரிய அளவிலான போரில்” ஈடுபட்டுள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஜோர்தான் மூன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், குவைத் இராணுவம் ஈரானிய ட்ரோன்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) அந்தத் தாக்குதலை மறுத்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவி ஏற்றுள்ளார்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக்…

22 0 0
உலக செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட…

24 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

22 0 0
உலக செய்திகள்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல்…

80 0 0