உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
233 பார்வைகள்

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்;

அதேவேளையில், காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தும் குயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ், ‘எம்வி பரிமா’ (MV Barima) கப்பல் தலைநகர் ஜோர்ஜ்டவுனிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வழியாக போர்ட் கைடுமாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளானதாக கூறினார்.

மீட்கப்பட்ட குழுவில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இருந்ததாக பிலிப்ஸ் தெரிவித்தார்.

காணாமல் போன பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0