உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

ஈராக்கில் இருந்து மாற்று வழி ஊடாக எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தீர்மானம்!

உலக செய்திகள் 1 நாள் முன்
39 பார்வைகள்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர ஈராக் மற்றும் சிரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே போர் நடந்து வருவதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில், 20 சதவீதம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தப் பாதையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருகிறது.

இதற்கு தீர்வாக, நீண்ட காலமாகச் செயல்படாமல் இருந்த ஈராக்-சிரியா வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாய்த்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தப் புனரமைப்புத் திட்டத்தை அமெரிக்க எரிசக்தி நிறுவனமான ‘செவ்ரான்’ முன்னெடுத்துள்ளது.

கடல் வழிப்பாதையை நம்பியிருக்காமல் நிலத்தின் வழியே குழாய்கள் அமைத்து எண்ணெயை கொண்டு செல்ல அமெரிக்க நிறுவனங்களும், ஈராக் அரசும் முடிவு செய்துள்ளன.

மேலும், சுகாதாரம், தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உட்பட பல துறைகளிலும், 5.77 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை பாராட்டியதோடு, ஈராக்-சிரியா கச்சா எண்ணெய் குழாய் திட்டம் முக்கியமான ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.

ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது தலைமைத்துவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ள சூழலில், எண்ணெய் குழாய் வழித் திட்டம் மீண்டும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்- சிரியா வழியாக லாரிகள் மூலம் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவி ஏற்றுள்ளார்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக்…

17 0 0
உலக செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட…

22 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

16 0 0
உலக செய்திகள்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா…

29 0 0