உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
42 பார்வைகள்

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதோட்ட பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்கள் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2026 ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹோமாகம பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் போது கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், நேற்று மாலை இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் எனவும், மற்றையவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பியகம பொலிஸ் பிரிவின் தெல்கொட பகுதியிலும், நவகமுவ பொலிஸ் பிரிவின் வந்தூரமுல்ல பகுதியிலும் வைத்து இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் ரணால மற்றும் பல்லம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹோமாகம பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

74 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

50 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

48 0 0