உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

இந்தியாவில் கன மழை – 19 பேர் பலி!

42 பார்வைகள்

இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 8 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் இராணுவ வீரர்களும் மாநில அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து 5 சிறுவர்கள் உட்பட 11 பேரை மீட்டுள்ளனர்.

நாகலாந்தின் மோன் மாவட்டத்திலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பைக் கருதி அமர்நாத் மற்றும் வைஷ்ணோ தேவி ஆலயங்களுக்கான வருடாந்த புனித யாத்திரைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

19 0 0
இந்திய செய்திகள்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம்…

16 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் என்பவரே இந்த…

12 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால்…

81 0 0