டெல்லியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை ரோகினி பகுதியில் நேற்று, கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி அடுக்குக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர்.
ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்திற்கு மோசமான வானிலைதான் காரணமா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இடிபாடுகளுக்கு இடையிலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் , டில்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல்...
கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...
இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை!
இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் ...
அமைச்சர்கள் தமது துறை சார்ந்த இடங்களில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்! – முதல்வர் விஜய் அதிரடி
ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும்...
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது; இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி...
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...
கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....
கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...










