உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
133 பார்வைகள்

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடி பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு அங்கு நடைபெற்று வந்த சுரங்கப் பாதை கட்டுமானப் பணியைப் பாதித்ததில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இவர்களில் ஏழு பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பாதை திட்டத்திற்காக அந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில், வயநாடு மாவட்டத்தின் மனந்தவாடி மற்றும் வைதிரி பகுதிகளில் பலத்த மழை பதிவானதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ (red alert) விடுத்தது.

அண்டை மாவட்டமான கோழிக்கோட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை, வனத்துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பேரிடர் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

அப்பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0