• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!

Mathavi by Mathavi
July 10, 2026
in இலங்கை செய்திகள்
0
நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!
Share on FacebookShare on Twitter

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குடும்பமும் உண்மையாகவே வலுவூட்டப்படுகிறதா என்பதை அளவிடக்கூடிய முறையான மதிப்பீட்டு முறையொன்றைத் தயாரித்து, அதன் அடிப்படையில் வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அதன்படி, பல்வேறு நிறுவனங்களினூடாக சிதறிப் போயுள்ள நிதி ஒதுக்கீடுகளை ஒருங்கிணைத்து, துல்லியமாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இதன்போது, சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ வேலைத்திட்டம் மற்றும் ஏனைய கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள், பிரதேச சபை மட்டத்தில் திட்டங்களுக்காக எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், சமூக மேம்பாட்டிற்காக ஏற்றுமதித் திறனைக் கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு அமைச்சின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள கடன் மற்றும் உதவிகளை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

அத்துடன், இந்த வருடத்திற்குள் இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களை நிவாரணங்களில் தங்கியிருப்பதில் இருந்து விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது 16,000 குடும்பங்களுக்கு உள-சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறுபவர்களை வெறுமனே நிவாரணங்களில் மாத்திரம் தங்கியிருக்கச் செய்யாமல், அவர்களை பகுதி நேர உழைப்புப் பங்களிப்புகளில் ஈடுபடுத்துவது முக்கியம் என்றும், அதற்காக பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எவ்வித உழைப்புப் பங்களிப்பையும் வழங்க முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அல்லது நாள்பட்ட நோயாளிகளைக் கொண்ட குடும்பங்களை அரசாங்கம் முழுமையாகப் பராமரிக்கும் அதேவேளையில், உழைக்கும் ஆற்றல் கொண்ட ஏனைய பிரிவினர் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் நாட்டின் உற்பத்தி செயல்முறைக்கு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஒவ்வொரு அமைச்சும் தனித்தனியாக பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, ஒரு குடும்ப அலகின் தேவைகளைத் துல்லியமாக இனங்கண்டு “குடும்ப அபிவிருத்தித் திட்டம்” ஒன்றை தயாரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற வெளிநாட்டு உதவிகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழிலுக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஒரு நிவாரணமாகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள 10 பகல்நேர பராமரிப்பு நிலையங்களை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யவும், எதிர்வரும் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இவ்வாறான 50 நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்காக பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற பொது இடங்களுக்கு இலகுவாக வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 283 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேலும் கவர்ச்சிகரமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Related Posts

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

by Mathavi
July 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை - 5...

கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்; பொலிஸார் தீவிர விசாரணை.!

கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
July 10, 2026
0

கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09)...

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!

by Mathavi
July 10, 2026
0

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிட புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள்...

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த...

தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!

தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!

by Mathavi
July 10, 2026
0

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கூட்டம்,...

சுகாதார சேவையை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.!

சுகாதார சேவையை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.!

by Mathavi
July 10, 2026
0

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு...

தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!

தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!

by Mathavi
July 10, 2026
0

"சட்டங்களை வைத்து - சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து - கூடுதலாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஒடுக்கும் சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம்...

யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!

யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!

by Mathavi
July 10, 2026
0

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று...

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி