• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!

selvan by selvan
July 8, 2026
in இலங்கை செய்திகள்
0
ரணிலுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 30 வரை ஒத்திவைப்பு!
Share on FacebookShare on Twitter

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன எனவும், அதற்கான கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, அந்தக் கோப்புகள் மீதான சட்டமா அதிபரின் இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, வழக்குக்கு அடிப்படையாகக் கூறப்படும் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

    எனினும், முன்னாள் ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்தின் போது, அவருக்கான வாகனங்களை அந்த நாட்டு அரசே வழங்கியதாக அவர் வாதிட்டார்.

    இது தொடர்பான பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ ஆவணங்களை அரச சட்டத்தரணியிடம் கையளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வாகனச் செலவுகள் குறித்துத் தனியானதொரு முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்துக்கு வருகை தந்த போது, அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் அவருடன் வருகை தந்திருந்தார்.

    முன்னாள் ஜனாதிபதியின் நீதிமன்ற வருகையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

    அத்துடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் அங்கு குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Related Posts

    டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

    டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

    by selvan
    July 9, 2026
    0

    டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

    திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

    திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

    by selvan
    July 9, 2026
    0

    சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...

    சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!

    by selvan
    July 9, 2026
    0

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...

    ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

    ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

    by selvan
    July 9, 2026
    0

    ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...

    பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

    பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

    by selvan
    July 9, 2026
    0

    மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...

    ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

    by selvan
    July 9, 2026
    0

    நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...

    13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

    13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

    by selvan
    July 9, 2026
    0

    எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026)...

    திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

    திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

    by selvan
    July 9, 2026
    0

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

    இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின!

    இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின!

    by selvan
    July 9, 2026
    0

    இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....

    ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது.!

    ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது.!

    by Mathavi
    July 9, 2026
    0

    சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 53 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

    Load More
    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி