• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
June 30, 2026
in இலங்கை செய்திகள்.
0
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் ஆவர்.

கண்டிப் பகுதியிலிருந்து 33 பேரைக் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், அந்த சுற்றுலாத் தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், லொக்கல்லா ஓயா குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவொன்றிற்கு நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்கள் அந்தத் தீவில் நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து நடந்த தருணத்தில் இந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் இருவர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்காததால் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் நேற்றுக் காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பதில் நீதிவான் எஸ்.கோவின்ன நேற்று மதியம் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சடலங்கள் இரண்டையும் மஹியங்கனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
June 30, 2026
0

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

by Mathavi
June 30, 2026
0

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

by Mathavi
June 30, 2026
0

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை...

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

by Mathavi
June 30, 2026
0

சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசுக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்காகவே அந்தச் சட்டம் தொடர்ந்து...

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாகத் தீர்வு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி