கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கெஸ்பவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கடுவெலை பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த பாரவூர்தியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்தக் கோர விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மேற்படி பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!
கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!
பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில்...
வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!
நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...
இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித...
இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை...
அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!
சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசுக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்காகவே அந்தச் சட்டம் தொடர்ந்து...
இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாகத் தீர்வு...
எங்களை அசைக்கவே முடியாது.!
மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசின்...










