உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
20 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக் கட்சி, பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்த விசேட கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது, பாரபட்சமற்ற முறையான நீதி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி வழியில் தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டனர்.

இந்த விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தப்பவிடப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள, பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்களின் முழுமையான ஆதரவை இந்தப் போராட்டத்துக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

23 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0