உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் ஒன்று நேற்று (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஒன்றியம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த தொற்றா நோய்க்கான ஆரோக்கிய உடல் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கும் இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், பிரசர், சிறுநீரகம், கண், உடற்பருமன், சுட்டி நிறை, உயரம் என்பன பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பரின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் முன்னாள் அதிபர் கலாபூஷணம் ஏ. பீர் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் சுகாதாரக் கல்வி தாதியர் அலுவலர் மதுசாலினி மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டனர்.

நிகழ்வின் முடிவில் ஒன்றியத்தின் சார்பாக டாக்டர் சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த குறுகிய கால ஏற்பாட்டைச் செய்த சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் முன்னாள் அதிபர் கலாபூஷணம் ஏ. பீர் முஹம்மட் மற்றும் பொதுச்செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பை உட்பட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் ஆகியோருக்கு ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0