• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பிக்கு சமூகத்தை அவமதிப்போர் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும்!

selvan by selvan
June 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
பிக்கு சமூகத்தை அவமதிப்போர் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும்!
Share on FacebookShare on Twitter

“சமூக ஊடகங்கள் வாயிலாகத் திட்டமிட்ட முறையில் பிக்கு சமூகத்தைக் கொச்சைப்படுத்தி வரும் மத எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மகா சங்கத்தினருக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக மத எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு கருத்துகளை முன்வைக்கும் குழுக்கள் மிகத் திட்டமிட்ட வகையில் இயங்கி வருகின்றன.

நாட்டில் உள்ள சில பிரதான அரசியற் கட்சிகளின் கொள்கைகளில்கூட ‘மதமற்ற தன்மை’ பகிரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் இந்நாட்டில் வீழ்த்தும் நோக்கில் பல்வேறு சூட்சுமமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மகா சங்கத்தினரிடையே (பிக்குகள்) ஏற்படும் மிகச் சிறிய தனிப்பட்ட விடயங்களைக்கூடப் பூதாகரமாக்கி, முழு பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் வகையிலும், சாசனத்திற்குப் பெருங்களங்கம் விளைவிக்கும் வகையிலும் இவர்கள் பொதுவெளியில் செயற்படுகின்றனர்.

புத்த பெருமானின் காலத்தில்கூட சாசனத்தின் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காக விநய விதிகள் (ஒழுக்கக் கோட்பாடுகள்) பிறப்பிக்கப்பட்டன.

ஆரம்பக் காலத்தில் சாசனத்துக்குள் நுழைந்தவர்கள் துறவறத்தின் உண்மையான மேன்மையை உணர்ந்து வந்தனர்.

ஆனால், பின்னர் வந்த காலங்களில் பல்வேறு சமூக மற்றும் குடும்ப நெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் தங்களுக்குரிய பாதுகாப்பைத் தேடி சாசனத்துக்குள் வந்தனர்.

இத்தகைய சூழலில்தான் புத்த பெருமான் சாசனத்தின் நீண்டகாலப் பாதுகாப்புக்காகத் கடுமையான ஒழுக்க விதிகளை வகுத்தார்.

இவ்வாறான வரலாற்று உண்மைகளைச் சரிவர அறியாத, பௌத்த தர்மம் குறித்து எவ்வித அடிப்படைப் புரிதலும் இல்லாத நபர்கள், இன்று பிக்கு சமூகத்தை மிக மோசமாக விமர்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

நான் சிறு வயதிலேயே புத்த பெருமானின் கருணை மீதான ஈர்ப்பினாலும், மதிப்பினாலும் துறவறத்தை மேற்கொண்டேன். சாசனத்துக்குள் நுழையும் சிறுவர்களுக்கே ஒழுக்கநெறிகள் மற்றும் சீலங்கள் முறையாகக் கற்பிக்கப்படுகின்றன.

இவ்வாறான புனிதமான பின்னணியில், ஒருசில பிக்குகளின் தனிப்பட்ட தவறுகளைச் சாட்டாக முன்வைத்து, முழு பிக்கு சமூகத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செயற்படும் நபர்கள் மீது அரசு ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது?

சில நபர்கள் வெளிநாடுகளில் இருந்து அல்லது பிற மதத் தீவிரவாதக் குழுக்களில் இருந்து பெருமளவு நிதி பெற்றுக்கொண்டு பௌத்த சாசனத்தை அழிக்க முற்படுகின்றார்களா என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுகின்றது.

பௌத்த பிக்குகளாகிய எங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Related Posts

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

by selvan
June 9, 2026
0

"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

by selvan
June 9, 2026
0

"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை

by selvan
June 9, 2026
0

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி

by selvan
June 9, 2026
0

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் 

by selvan
June 9, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!

by selvan
June 9, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

by selvan
June 9, 2026
0

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த...

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

மீண்டும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் – 28 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

by selvan
June 9, 2026
0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானம், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து 128...

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

சுரேஷ் சலே விடயத்தில் சர்வதேச மனித உரிமை விதிகளைப் பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!

by selvan
June 9, 2026
0

"அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக...

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

‘எல் நினோ’ காலநிலை சவாலை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

by selvan
June 9, 2026
0

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் மற்றும் அதற்கான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி