உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம். பி விஜயம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என பிரதேச வைத்திய அதிகாரியிடம் அவர் உறுதியளித்தார்.

இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரி (DMO) மருத்துவர் க.சசிதரன், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் திரு சுபாதரன், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திரு நவநீதன் வலிகாமம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு ஆதவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு சபேசன், சங்கானை பட்டின அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு குணசிறி, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும் சிறீதரன் எம்.பியின் வட்டுக்கோட்டைத் தொகுதி இணைப்பாளருமாகிய திரு சசிதரன், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு குமணன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் திரு செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

2 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0