உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விபத்தில் சிக்கி இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கண்டி – தலாத்துஓயா, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு வயதும் இரண்டு மாதங்களும் உடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (03) புதன்கிழமை பிற்பகல் தென்னகும்பர – ராகல வீதியில் நேர்ந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை உனுவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் இரண்டு மாதமும் உடைய பெண் குழந்தையாவார்.

தென்னகும்பர நோக்கிச் சென்ற கார் ஒன்று, தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டியைச் செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த சமயத்தில், உயிரிழந்த அந்தக் குழந்தை முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி தலாத்துஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

13 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0