உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா? – பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வட மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் என்றும், அவரின் ஊடாக வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம் ஊடகங்கள் வினவியபோது அவர் அதனை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“சவேந்திர சில்வா என்பவர் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு சிறந்த இராணுவ வீரர். அவர் அரசியல் ரீதியாக அப்படியானதொரு முடிவை எடுக்க மாட்டார். அரசியல் தொடர்பாகப் பேசுவதற்குக் கூட அவர் விரும்புவதில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் அவருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு நான் அவரிடம் பேசியிருந்தால்கூட, அவர் என்னைத் திட்டியிருப்பார். எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவல்கள் முற்றிலும் போலியானவை ஆகும்.

கட்சி மட்டத்திலும் இது குறித்து எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை. சவேந்திர சில்வாவை அரசியலுக்குக் கொண்டுவருவதற்கு நான் முயற்சிப்பதாகக் கூறப்படும் தகவல்களும் தவறானவை. தற்போதைய ஆளுங்கட்சியின் ‘சலவை இயந்திரங்களே’ திட்டமிட்ட அடிப்படையில் இப்படியான அபாண்டமான வதந்திகளைப் பரப்பி வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

13 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0