நபர் ஒருவரை கடத்திச் சென்று கொ*லை; ஐவர் கைது.!
மட்டக்குளி பொலிஸ் பிரிவில் வைத்து கடந்த 22ஆம் திகதி நபர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கொழும்பு 15 மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 36 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.