உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குஜராத்தில் புடவை மடிக்கும்போது விபரீதம்: ஃபோம் தாள்கள் தீப்பிடித்ததில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
67 பார்வைகள்

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர் .
லிம்பாயத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட மித்தி காடி பகுதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி வீட்டில் காலை சுமார் 10 மணியளவில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடும்பத்தினர் ஸ்விட்ச் ஃபோர்டுக்கு அருகில் நின்றுகொண்டு ஃபோம் தாள்களைப் பயன்படுத்தி புடவைகளை மடித்துக் கொண்டிருந்துள்ளன.
அப்போது ஃபோம் தாள்களில் மின்பொறி பாய்ந்து தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளே சிக்கியிருந்த ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் பேகம் அன்சாரி (65), ஹுசா பேகம் அன்சாரி (18), ஷபினா அன்சாரி (28), பர்வின் அப்துல் அன்சாரி (19), சுபான் அலி அன்சாரி (4) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி 5 பேரும் உயிரிழந்தனர். தீப்பிடித்த அறையில் இருந்து வேறு அறைக்கு சென்றாலும், ஃபோம் தாள்களில் இருந்து எரிந்து வெளியேறிய ரசாயனங்களின் நச்சுப்புகை அவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், புடவைகள் மடிக்கும் பேக்கிங் வேலைக்காக அவர்கள் சூரத்திற்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0