உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லஷ்கர்-இ-தொய்பா குழுவின் பயங்கரவாதி டெல்லி பொலிஸாரால் கைது!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மெட்ரோ போஸ்டர் வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பயங்கரவாத சந்தேகநபருமான ஷபீர் அகமட் லோன் நேற்று (30) டெல்லி பொலிஸாரின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குறித்த அமைப்புடன் இரகசியமாகச் செயல்பட்டு வந்த உறுப்பினராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதற்கு முன்னர் கொல்கத்தா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில், பங்களாதேஷைச் சேர்ந்த ஏழு நபர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரும் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.


பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் 2019ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், பின்னர் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றிருந்தார் என விசாரணைகளில்தெரியவந்துள்ளது.மேலும், 2008 மும்பை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத் மற்றும் ஜகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியோருடன் நேரடி தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் மதஸ்தலங்கள் அல்லது அதிக மக்கள் கூடும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்து டெல்லி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0