சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.!
பிஹாரில் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்த நிதிஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவரான அவர், மத்திய அரசியலுக்கு செல்லும் முடிவைத் தொடர்ந்து தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், இதுவரை முதல்வர் பதவியில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினராக அவர் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.