புதுடில்லியில் சமையல் எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு.!
புது டில்லியின் சந்த் ரவிதாஸ் நகரில் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக பெரும் திரளான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.மத்திய கிழக்கு மோதல் நிலை காரணமாக இந்தியாவின் பல இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் எதிர்காலத்தில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பல இடங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.அந்தவகையில் இந்தியாவின் தலைநகரான டில்லியில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.