குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்.!
குஜராத்தில் ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் புபேந்திர படேல் தாக்கல் செய்த இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் 7 மணி நேரத்துக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சட்டம் மத வேறுபாடின்றி திருமணம், விவாகரத்து, மற்றும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் போன்ற விடயங்களில் பொதுவான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துகிறது. திருமணம் செய்யாமல் வாழும் நபர்களுக்கான பதிவு முறைமையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைத்துணை உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்ய முடியாது; துணைவர் உயிரிழந்த பின் மட்டுமே மறுமணம் செல்லுபடியாகும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சட்டம் மாநிலத்திற்கு வெளியிலும் வசிக்கும் குஜராத்து மக்களுக்கு பொருந்தும். ஆனால் பழங்குடியின மக்களுக்கு இந்த பொது சிவில் சட்டம் பொருந்தாது.முந்தைய முறையில், உத்தராகண்ட் மாநிலம் 2024ஆம் ஆண்டு நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்தியது.