உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
76 பார்வைகள்

மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலை குறித்து ஆலோசிப்பதற்காக, இந்திய மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டியது. இந்தக் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தின் போது, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்து விரிவான விளக்கமளித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்கள், குறிப்பாக எரிசக்தி விநியோகம் தொடர்பான நிலவரத்தையும் விளக்கினர்.நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு (LPG) மற்றும் உரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன என்றும், எரிசக்தி விநியோகத்தில் உடனடி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

`
இதற்கிடையில், மேற்கு ஆசிய பிரச்சினையில் பாகிஸ்தானின் பங்கு குறித்து எதிர்க்கட்சித் தரப்பினர் கேள்விகளை எழுப்பினர். இக்கேள்விகளுக்கு மத்திய அரசு திருப்திகரமான பதில்களை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மேற்கு ஆசிய மோதலின் பின்னணியில், இந்தியா தனது பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0