உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

காஷ்மீர் பெண் தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை – டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிரவாதி ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவருடன் தொடர்புடைய இரு கூட்டாளிகளுக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆசியா அன்ட்ராபி, ஆரம்பத்தில் ஒரு மத அமைப்பில் செயல்பட்டு வந்தவர்.

பின்னர் அதிலிருந்து விலகி தனித்துவமான அமைப்பொன்றை உருவாக்கி, காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


அவரது செயல்பாடுகளில், வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தது மற்றும் நாட்டின் அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1990களிலிருந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வந்த அவர், 2018ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதே வழக்கில் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம், முன்னதாகவே மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருந்த நிலையில், தற்போது தண்டனையை அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0