உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மேற்கு ஆசியப் போரின் தாக்கங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்ததையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கு கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், மத்திய அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டு, தற்போது அதன் பொறுப்பை பொதுமக்கள் மீது சுமத்த முயல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.


இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தடையற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மின் நிலையங்களுக்கான எரிவாயு ஒதுக்கீட்டினை மறுபரிசீலனை செய்தல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11ஆம் திகதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், மத்திய அரசிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், மார்ச் 14ஆம் தேதி தமிழக அரசு உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தி தன்னிச்சையான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் 15ஆம் தேதி மத்திய அரசின் தயார்நிலை இன்மையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தொடர்ச்சியான மோதல் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் ஆற்றிய உரைக்கு பின்னரே தமிழக முதல்வரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0