உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்கு வங்கத்தை 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் – மம்தா பானர்ஜி நம்பிக்கை.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.இதன்போது உரையாற்றிய அவர், கடந்த 15 ஆண்டுகளில் திரிணமூல் ஆட்சி காலத்தில் மேற்கு வங்கம் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

மாநிலத்தின் பொருளாதாரம் ஆறு மடங்கு வளர்ச்சி அடைந்ததுடன், ஒருவரின் சராசரி வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.மேலும், 1.72 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மூலதனச் செலவு 18 மடங்காகவும், கட்டமைப்பு முதலீடுகள் 7 மடங்காகவும் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பின்மை கடந்த ஆறு ஆண்டுகளில் 45.65 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை இந்தியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார மாநிலமாக மாற்றுவதே இலக்கு எனவும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில பொருளாதாரம் 40 லட்சம் கோடி ரூபாவாக உயரும் என்றும், நவீன கட்டமைப்புகள், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் புதிய போக்குவரத்து மையங்கள் உருவாக்கப்பட்டு மேற்கு வங்கம் கிழக்கு இந்தியாவின் முக்கிய நுழைவாயிலாக மாறும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0