உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஏர் சீனா’ நிறுவனம், சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கு வதாக அறிவித்துள்ளது.இந்தியா- சீனா உறவு, 2020ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின் மோசமடைந்தது.
அதன் பின் நடந்த பல்வேறு கட்ட பேச்சுக்கு பின், இரு தரப்பு உறவு படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவுக்கு சென்று சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சு நடத்தினார்.அதில், இரு நாடுகளும் நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க ஒப்புக்கொண்டன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய தயாரிப்புகளுக்கு 50 சதவீதம் வரி விதித்த பின் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ‘ஏர் சீனா’ நிறுவனம், பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து , ஏர் சீனா, டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குகிறது எனவும் இது வெறும் பயணம் மட்டுமல்ல. நம்பிக்கை, வர்த்தகம், சுற்றுலாவை உள்ளடக் கியது,” எனவும் இந்தியாவில் உள்ள சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் யு ஜிங் தெரிவித்துள்ளார்.

இதே போல் இந்தியாவின் ‘இண்டிகோ’ விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு நேரடி விமானம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே இந்தியாவின் விமான நிறுவனங்கள், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமானங்களை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0