மத்திய அரசு நிலைப்பாட்டுக்கு காங். எம்.பி. சசி தரூர் ஆதரவு.!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியை கொன்றதை மத்திய அரசு கண்டிக்காமல் இருப்பது சரியான நடுநிலை கொள்கை அல்ல என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஒரு ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் முன்னிட்டு கூறியுள்ளார்.
அவர், “நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரான் போர் விஷயத்தில் மத்திய அரசு அமைதியான நடுநிலை கொள்கையை பின்பற்றியுள்ளது. ஆனால், ஆடம்பரமான வெற்று பேச்சுகள் நடைமுறைக்கு உதவாது. இந்த நிலைப்பாடு எந்தவொரு தரப்பினரையும் பகைத்து கொள்ளாமல், இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பை தருகிறது. இது பொறுப்பான நிர்வாகத்திறனைக் காட்டும் செயல்” என தெரிவித்துள்ளார்.