உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகள் குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயத்திற்கு நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அந்தவைகையில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரோடு கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களை அகற்றுதல், பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி அமைத்தல், 08 வகுப்பறைக் கட்டடங்கள் தேவை, சீரான மலசலகூட வசதியை ஏற்படுத்துதல், மிதிவண்டி தரிப்பிடம் அமைத்தல், பாடசாலைக்கான போக்குவரத்துச் சீரின்மை, விளையாட்டு உபகரணங்கள் தேவை, வகுப்பறைகளுக்கான தளபாட பற்றாக்குறைகள் உள்ளிட்ட குறைபாடுகளும், கோரிக்கைகளும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கெண்டுவரப்பட்டன.

இந்நிலையில் கோரிகைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தம்மிடம் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் கோரிக்கைள் தொடர்பில் தம்மால் உரியவகையில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

37 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

47 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

49 0 0