உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 நோயாளிகள் உயிரிழப்பு.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
51 பார்வைகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் அமைந்துள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.


மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட சில நோயாளிகள், அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக அறிந்த ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜி, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் இருந்து தப்பிய நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முழுமையாக வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.மேலும், இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய சட்டரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.அத்துடன் காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முழுமையான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0