உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
44 பார்வைகள்

சமையல் எரிவாயு விநியோகத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும், நாட்டில் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலகில் இரண்டாவது பெரிய சமையல் எரிவாயு நுகர்வு நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டில் பயன்படுத்தப்படும் எரிவாயுவில் பெரும்பாலானவை மேற்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்படுகின்றன. தற்போது அந்தப் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக கடல் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.


இந்த சூழ்நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இதனால் வழக்கத்தைவிட அதிகமாக சுமார் 88 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும், எந்த விநியோக நிலையத்திலும் எரிவாயு இருப்பு தீர்ந்துவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


தேவைப்படும் நேரங்களில் மட்டும் பொதுமக்கள் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தேவையற்ற அச்சத்தால் அதிகப்படியான முன்பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் இருப்பு போதுமான அளவில் உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, வர்த்தக சிலிண்டர் விநியோகத்துக்கான முடிவுகள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும் என்றும் சிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மார்ச் 13 ஆம் திகதி மட்டும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0