தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.581 கோடி சொத்துகள் முடக்கம்.!
அனில் அம்பானியின் நிறுவனங்கள் ரூ.11,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால் அமலாக்கத்துறை நடவடிக்கை
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் ரூ.11,000 கோடிக்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாக யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி ஆகியவை புகார் அளித்துள்ளன.
இந்த புகாரைத் தொடர்ந்து CBI வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த 6ம் தேதி, அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தி முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ₹581.65 கோடி மதிப்பிலான நிலங்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்தச் சொத்துக்கள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் ₹16,310 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.