• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கில் வீட்டுத் திட்டப் பயனாளிகள்; அரசியல் தலையீடற்ற சுயாதீன தெரிவு.!

Mathavi by Mathavi
March 13, 2026
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
வடக்கில் வீட்டுத் திட்டப் பயனாளிகள்; அரசியல் தலையீடற்ற சுயாதீன தெரிவு.!
Share on FacebookShare on Twitter

“நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாகச் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நாம் செயற்பட்டிருக்கின்றோம்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கமைவாக, வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் வருமான வரிப் பரிசோதகராகப் பணியாற்றி, நேற்றுமுன்தினம் பாம்பு தீண்டி அகால மரணமடைந்த திருநாவுக்கரசு கிருபாகரனின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் வீடற்றவர்கள் என்று எவருமே இருக்கக் கூடாது என்பதுதான் தற்போதைய அரசின் பிரதான கொள்கையாகவுள்ளது. இதனைப் பல்வேறு அமைச்சுக்களும் மாகாண சபைகளும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டு 31 ஆயிரம் வீடுகள் இவ்வாறு அமைக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக நாம் முன்னெடுக்கும் இந்த வீட்டுத்திட்டத்தில், எங்கு தேவைப்பாடுகள் அதிகமாக உள்ளனவோ அங்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.

வீட்டுத்திட்டங்கள் கோரி எனக்குக் கிடைக்கப்பெறும் கோரிக்கைகளை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி, அவர்கள் பொருத்தமான பயனாளிகள்தானா என்பதைக் களப் பயணங்கள் ஊடாக உறுதிப்படுத்திய பின்னரே வீடுகளை வழங்குகின்றோம்.

அத்துடன், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் அதனை மேலதிகமாக உறுதிப்படுத்துகின்றோம். இவ்வாறாக மிகவும் வெளிப்படைத்தன்மையுடனேயே பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியல் அமைச்சர்களிடமிருந்தே வரும். ஆனால், எமது இந்த வீட்டுத்திட்டத்துக்குரிய எந்தவொரு பயனாளியையும் அமைச்சர்களோ அல்லது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ தெரிவு செய்யவில்லை. முற்றுமுழுதாகச் சுயாதீனமாக எமது அரச அதிகாரிகளாலேயே இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

வீட்டுத்திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளே, இது உங்களுக்கான வீடு. உங்கள் வளமான வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதை மனதிலிருத்தி, உரிய காலப்பகுதிக்குள் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் அந்த வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து, சிறப்பாகப் படித்து முன்னேற வேண்டும். உங்கள் கிராமத்தின் உண்மையான அபிவிருத்தி என்பது வீதிகளில் அல்ல, அது உங்கள் பிள்ளைகளின் கல்வியில்தான் தங்கியிருக்கின்றது.

மேலும், இந்த வீட்டுத்திட்டத்துக்குரிய மூலப்பொருட்களை நீங்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.” – என்று உறுதியளித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தற்போதைய அரசின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

வடக்கு மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து 151 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், தலா 1.8 மில்லியன் ரூபா பெறுமதியில் 75 புதிய வீடுகளும், தலா 0.5 மில்லியன் ரூபா செலவில் 32 வீடுகள் திருத்தப்படவும் உள்ளன. இதற்கமைவாக, மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பயனாளிகளுக்கான காசோலைகள் இந்த நிகழ்வில் வைத்து அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. ஏனைய பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரத்தில் ஒரு வீட்டுக்கும், வன்னிவிளாங்குளம் பகுதியில் 3 வீடுகளுக்குமாக அடிக்கற்களும் நடுகை செய்யப்பட்டன.

வடக்கு மாகாண நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ம.சர்மிலீ, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன், மாந்தை கிழக்கு பிரதேச சபைச் செயலாளர் திருமதி பா.சிவதர்சினி, பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

by selvan
July 9, 2026
0

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

by selvan
July 9, 2026
0

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...

சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!

by selvan
July 9, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

by selvan
July 9, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

by selvan
July 9, 2026
0

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...

ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

by selvan
July 9, 2026
0

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

by selvan
July 9, 2026
0

எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026)...

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

by selvan
July 9, 2026
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி