உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

வளைகுடா நாடுகளிலும் மோதல் தீவிரமாகத் தொடரும் நிலையில், கத்தாரிலிருந்து சுமார் 1,000 இந்தியர்கள் தாயகத்திற்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.UAE, சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தாயகம் திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததாவது, இந்தச் சுற்றுலாப் பயணிகள் டில்லி, மும்பை மற்றும் கொச்சி நகரங்களுக்கு வந்தனர்.மேலும், சவுதி அரேபியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு 96 மணிநேரச் செல்லுபடியாகும் தற்காலிக போக்குவரத்து விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூதரகத்தின் 24 மணி நேர செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருகிறது.இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை வழங்கிய கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் விமானம் இன்றும் இந்தியர்களை டில்லி நோக்கி அழைத்துச் செல்லும் திட்டம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஹ்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் போக்குவரத்துக்கு இந்தியத் தூதரகத்தின் எந்த தொடர்பும் இல்லாததாக பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0