உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலக ஆயுத இறக்குமதி: இந்தியா இரண்டாம் இடம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
38 பார்வைகள்

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.


அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழல் இந்தியாவை அதிக அளவில் ஆயுதங்களை வாங்குவதற்கு தூண்டியுள்ளது. கடந்த 2016–2020 காலப்பகுதியை ஒப்பிடுகையில், 2021–2025 காலத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளது.


அதினாலும், உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா 8.2% பங்குடன் இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (9.7%) உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி திட்டங்கள் அதிகரித்திருப்பதால் இறக்குமதி ஓரளவு குறைந்துள்ளது.

முதன்மை ஆயுத விநியோகஸ்தராக ரஷ்யா (40%) இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் அளவு பாதியாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரான்ஸ் (29%) மற்றும் இஸ்ரேல் (15%) ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0