சமையல் எரிவாயு உயர்வை திரும்பப்பெற கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்ததால், உணவுப் பொருட்கள் சங்கிலிப் போல விலையுயரும் என்று எச்சரித்துள்ளார்.பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருட்களுக்கும் இதன் தாக்கம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் போர் காரணமாக எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று பாஜகவினர் முன்பு கூறியிருந்த நிலையில், சிலிண்டருக்கு ரூ.60 உயர்வு செய்தது கண்டிக்கத்தக்கது என அவர் வலியுறுத்தினார்.
மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியதாவது, போர் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.