உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நிதிஷ் குமாரின் மகன் ஜேடியு கட்சியில் இணைவு: துணை முதல்வராக வாய்ப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) நேற்று ஐக்கிய ஜனதா தள கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். அவரை மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, தனது மகன் நிஷாந்த் குமாரை கட்சியின் அடுத்த தலைமையாக கொண்டு வர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி நிதிஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவும், நிஷாந்த் குமாரை ஐக்கிய ஜனதா தளத்தில் இணைத்து துணை முதல்வராக்கவும், முதல்வர் பதவியை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.


அரசியலில் இதுவரை இருந்து விலகி இருந்த நிஷாந்த் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இந்த நிகழ்வில் கட்சியின் செயல் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ஜா, பீகார் துணை முதல்வர் விஜய் சௌத்ரி மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.கட்சியில் இணைந்த பின்னர், நிஷாந்த் குமார் தலைமையகத்திற்கு வெளியே உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கட்சியின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு கட்சியின் நலனுக்காக பணியாற்றுவேன். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட என் தந்தை எடுத்த முடிவை மதிக்கிறேன்” என தெரிவித்தார்.இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஹரி நாராயண் சிங் கூறுகையில், நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்ததாக தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0