உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மூவருக்கும் இறப்பு வரை சிறைத் தண்டனை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை பீளமேடு விமான நிலையம் அருகே மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மூவர் ஆண் நண்பரை தாக்கி, மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பாக கருப்பசாமி, அவரது தம்பி காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணை முழுமையாக நடைபெற்றதுடன், 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பர், உறவினர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.72 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தடயவியல் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை அதிகாரிகள் காணொலி வாயிலாக சாட்சி வழங்கினர்.


விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி சுந்தரராஜன் இன்று (மார்ச் 7) தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் முக்கியமான முடிவாக கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0