உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கோடநாடு சம்பவ விசாரணை நீடிப்பு: சிபிசிஐடி தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் நிறைவு செய்யப்படாததற்கான காரணத்தை சிபிசிஐடி அதிகாரிகளிடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் நீலகிரி மாவட்டத்தின் கோடநாடு பகுதியில் அமைந்துள்ளது.


அந்தத் தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காவலாளியை கொலை செய்த கும்பல், பங்களாவில் இருந்த சில முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபரான சயான் உள்ளிட்ட 10 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.


திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து, மேற்கு மண்டல ஐஜி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதன்போது, வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 316 பேரிடம் மறுவிசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.


பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்காக மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கட்டங்களில் சந்தேகநபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கு நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான பொலிஸார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.


இதன்போது, வழக்கின் விசாரணை இன்னும் நிறைவு செய்யப்படாததற்கான காரணத்தை நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


மேலும், வழக்கு தொடர்பான கைப்பேசி உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கையை குஜராத்தில் உள்ள பிஎஸ்என்எல் ஆய்வகத்திடம் கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை இன்னும் கிடைக்காத காரணத்தினால் விசாரணை தாமதமாகி வருவதாகவும் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0