இந்திய மருத்துவ முறைக்கு அமெரிக்கர் பாராட்டு.!
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர் சார்லி இவான்ஸ், இந்திய மருத்துவ முறைகளை பாராட்டியுள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு வந்துள்ள அவர், ரிஷிகேஷ் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்தியாவில் நிலவி வரும் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளை பார்த்த அவர் அதனைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 148 நாட்களாக இந்தியாவில் தங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய மருத்துவ முறை மேற்கத்திய மருத்துவத்தை விட பல்வேறு வகைகளில் சிறப்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷிகேஷில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட யோகி காந்திகா என்ற மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதாகவும், அவை சிறந்த பலனை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியர்களின் வீடுகளில் காணப்படும் ஆயுர்வேத மருந்துகள் பலவும் பயனுள்ளதாக உள்ளதாகவும், மேற்கத்திய மருந்துகளை விட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் உயர்ந்தவை என்பதை தாம் நேரடியாக அனுபவித்ததாகவும் சார்லி இவான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.