உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அசாமில் போர் விமான விபத்து; இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டம் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.ஜோர்ஹாட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விமானிகள் அனுஜ் மற்றும் புர்வேஷ் துராக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்திய விமானப்படை வெளியிட்ட சமூக ஊடக அறிக்கையில், உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினருடன் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.சுகோய்-30 எம்.கே.ஐ என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட, பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நீண்ட தூர போர் விமானமாகும்.

இது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால்வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உரிமம் பெற்று தயாரிக்கப்படுகிறது.இந்திய விமானப்படை தற்போது 260-க்கும் மேற்பட்ட இவ்வகை விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டுகளிலும் இதே வகை விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0