உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கர்நாடகவில் பதினாறு வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

கர்நாடக மாநிலத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார்.மாநில சட்டமன்றத்தில் 2026–2027 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் நான்கு இலட்சத்து இருபதாயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான இந்த நிதித் திட்டம், பெங்களூரு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிறுவர்களிடையே அதிகரித்து வரும் கைப்பேசி பயன்பாடு மற்றும் சமூக ஊடக ஈடுபாடு தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தடை முன்மொழியப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.பதினாறு வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநில அரசுக்குள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0