உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

போர்களுக்கு விரைவில் முடிவு வேண்டும்: மோடி வலியுறுத்தல்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் நடைபெறும் போர்களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது, ராணுவ மோதல்களால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இரு தலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிமுறைகளில் நம்பிக்கை கொண்ட நாடுகள் என மோடி குறிப்பிட்டார்.

உக்ரைன் பிரச்சினையாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியா போராக இருந்தாலும், அவற்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் மின்னணு மயமாக்கல், நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு, ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் குவாண்டம் கணினி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.


அத்துடன் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியா – பின்லாந்து வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0