உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் போர்க் கப்பல் மூழ்கிய போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 4 ஆம் தேதி அதிகாலை ஈரானின் போர்க்கப்பல் “ஐஆர்ஐஎஸ் டேனா” விலிருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் காலே கடற்பரப்பில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் அந்த ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாகவும், அது இலங்கை கடல் எல்லைக்குள் உள்ள பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிடைத்தவுடன் இந்திய கடற்படை உடனடியாக மீட்புப் பணியை ஆரம்பித்ததாகவும், “ஐஎன்எஸ் தரங்கிணி” என்ற கப்பல் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கொச்சியில் இருந்து “ஐஎன்எஸ் இக்சாக்” என்ற கப்பலும் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் இருந்தவர்களுக்கு உயிர் காக்கும் மேலங்கிகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையுடன் இணைந்து தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0