உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஸ்ரீநகர் மத்திய சிறை கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி நியமனம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு நான்கு அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனத்தின்படி, ஸ்ரீநகர் மத்திய சிறையின் பொறுப்பு 2012 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி சபா ஷாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, அவர் ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பணியாளர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் சேவையாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.ஸ்ரீநகரின் பிர் பாக் பகுதியில் வசிக்கும் சபா ஷால், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு காஷ்மீர் அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.


அவரை அறிந்த அதிகாரிகள், அவர் அனுபவமுள்ள, திறமையான அதிகாரி எனப் பாராட்டியுள்ளனர். இருப்பினும், இது அவருக்கு சவாலான பணியாக இருக்கும் என்றும், சிறைத் துறையில் உள்ள அனுபவம் அவருக்கு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர் மத்திய சிறை, ஜம்மு காஷ்மீரின் பழமையான சிறைகளில் ஒன்றாகும். இங்கு அரசியல் கைதிகள் உட்பட 900-க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறைக்கு காவல் துறையுடன் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையும் பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
கடந்த காலங்களில் வெளிநாட்டு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் பலரும் இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களில் பலர் ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் உள்ளபிற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0