உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது நடுநிலையானது அல்ல – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
64 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளால் குறிவைக்கப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய மத்திய அரசு மௌனம் காப்பது நடுநிலையான நிலைப்பாடு அல்ல எனவும், இது ஒரு பொறுப்புத் துறப்பு எனவும் இந்திய பாராளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது நாட்டின் வெளிநாட்டு கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீது இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் சோனியா காந்தி தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். ஈரானின் இறையாண்மை மீறப்பட்டதையோ அல்லது இந்த கொலைச் சம்பவத்தையோ மத்திய அரசு இதுவரை கண்டிக்காதது கவலைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்ற வரவு–செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குறித்து பிரதமர் குறிப்பிடாத நிலையில், ஈரான் மேற்கொண்ட பதில் தாக்குதலை மட்டும் கண்டித்திருப்பது சம்பிரதாயமான அணுகுமுறை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களின்அடிப்படையில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாதது வெளிநாட்டு கொள்கையின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0