உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பீகார் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் நிலை காணப்படுகிறது.அவற்றில் ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மற்றொரு இடத்திற்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேவேளை அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக பொறுப்பேற்கலாம் என்றும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் புதிய முதல்வராக பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் முயற்சி 2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.எனினும், நிதிஷ் குமார் முன்னெடுத்த வளர்ச்சி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அந்த முடிவு அவசரமாக எடுக்கப்படவில்லை.75 வயதான நிதிஷ் குமார் பத்து முறை பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார்.


பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது மகா கூட்டணி எதனுடன் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று வழிநடத்தியவர் என்றும் கூறப்படுகிறது.கடந்த 2025 ஆம் ஆண்டு அவரது அரசுக்கு எதிராக எதிர்ப்பலை எழுந்ததாக கூறப்பட்டபோதிலும், பெண்களுக்குநிதியுதவி, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல், மதுபானத் தடைவிதி போன்ற திட்டங்களின் மூலம் அவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.


மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே இறுதி நாளாக இருப்பதால், இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இன்று தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0