உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அகழ்வாராய்ச்சி தாமதம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; மாறாக இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகும். அதற்கான அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:


கீழடி, ஆதிச்சநல்லூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதல் கோரி தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி எட்டு மாதங்கள் ஆகின்றன. ஜூலை 2025-இல் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டதுடன், நவம்பர் மாதம் இந்திய தொல்லியல் துறையின் தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இவை எடுத்துக்கொள்ளப்பட்டன.

எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கான ஏற்ற காலம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே. இந்த காலத்தைத் தவறவிட்டால் பருவமழையால் களப்பணிகள் பாதிக்கப்படும், முக்கிய ஆய்வுகள் தாமதமாகும், 2025–2026 நிதி ஒதுக்கீடும் பயனற்றதாகிவிடும்.


எனவே, மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், தமிழ் நாகரிகத்தின் வரலாற்று உண்மைகள் வெளிப்படுவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
“அகழ்வாராய்ச்சிக்கு உடனடி ஒப்புதல் வழங்குங்கள்; வரலாறு பேசட்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0